திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தல் வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தல் வாலிபர் கைது

Update: 2021-05-11 16:37 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த எடையூர் கூட்டுரோடு அருகே திருப்பாலபந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், ஏசு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் கர்நாடக மாநில 442 மது பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த எடையூர் கிராமத்தைச் சார்ந்த கண்ணன் மகன் ராஜகுமாரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஊரடங்கு காலம் என்பதால் பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜகுமாரனை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்