சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி:
சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 15 ஆண்டு தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமி கடத்தல்
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மாயமானார். இது குறித்து அவருடைய பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவர்முக்குளத்தைச் சேர்ந்த சேகர் (வயது 25) என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதற்கு, ஓசூர் தொரப்பள்ளியை சேர்ந்த முருகன் (37) என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.