2 வது நாளாக வீடுகளில் மக்கள் முடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 2-வது நாளாக பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

Update: 2021-05-11 15:41 GMT
கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 2-வது நாளாக பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

2-வது நாளாக முழு முடக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் வருகிற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதைத் தொடர்ந்து  2-வது நாளாக. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், மஞ்சூர் ஆகிய தாலுகாக்களில் பஸ்கள் ஓடவில்லை. 

மேலும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் பொருட்களை வாங்க தங்களது வாகனங்களில் வந்து சென்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் பகல் 12 மணி வரை அதிகமாக காணப்பட்டது.

அபராதம் விதிப்பு

அதன் பின்னர் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் முழு முடக்கத்தால் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

மேலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது அரசின் உத்தரவை மீறி தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இனிவரும் நாட்களில் உத்தரவை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். 

மேலும் செய்திகள்