பழனியில் பிடிபட்ட 2 பாம்புகள்

பழனியில் 2 பாம்புகள் பிடிபட்டன.

Update: 2021-05-11 15:08 GMT
பழனி:

பழனி அருகே உள்ள கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து அவர், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டுக்குள் பதுங்கி இருந்த 4 அடி நீள நாக பாம்பை லாவகமாக பிடித்தனர்.

இதேபோல் பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த பகவதி என்பவரின் தோட்டத்து மோட்டார் அறையில் நாக பாம்பு பதுங்கி இருந்தது.

 இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று பாம்பை பிடித்தனர். அந்த 2 பாம்புகளும் பழனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் அந்த பாம்புகளை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்