பெண் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி மேலும் 291 பேருக்கு தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் கொேரானாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 236 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் 85 வயது முதியவர், 51 வயது பெண் மற்றும் 44 வயது ஆண் ஆகிய 3 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக 300-க்கு மேல் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, நேற்று 300-க்கு கீழ் வந்தது.
அதன்படி நேற்று 126 பெண்கள் உள்பட மொத்தம் 291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 890 ஆனது. அதேநேரம் 192 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,904 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 106 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.