உடன்குடியில் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
உடன்குடியில் போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது;
உடன்குடி:
உடன்குடியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் குலசேகரன்பட்டினம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது, இருசக்கர வாகனத்தில் அங்குமிங்கும் அலைய கூடாது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், வாகன ஓட்டுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி விளக்கம் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டனர்.