சாயர்புரம் அருகே மதுவிற்ற 4 பேர் கைது
சாயர்புரம் அருகே மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சாயர்புரம்:
சாயர்புரத்தில், புதுக்கோட்டை செல்லும் தேரி சாலையில் அனுமதியின்றி சிலர் மது விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம் அருள்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விற்றுக்கொண்டிருந்த கூட்டாம்புளியை சேர்ந்த காசி மகன் கண்ணன்(வயது 50), முடிவைத்தானேந்தலை சேர்ந்த குருந்தன் மகன் ஆறுமுகம் (29), மாடசாமி மகன் ஆறுமுகநயினார் (48), சிவத்தையாபுரம் ராஜகோபால் மகன் கார்த்தீஸ்வரன்(34) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.