கழுகுமலையில் பெண்ணிடம் நகை பறிப்பு

கழுகுமலையில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது

Update: 2021-05-11 12:48 GMT
கழுகுமலை:
கழுகுமலை ஓம்சக்தி நகரை சேர்ந்த காளிதாஸ் என்பவருடைய மனைவி சாந்தி (வயது 36). இவர் சம்பவத்தன்று தன்னுடைய உடைந்த கம்மலை சரி செய்வதற்காக கழுகுமலையில் உள்ள நகைக்கடைக்கு வந்துள்ளார். நகைக்கடையில் சரிசெய்ய காலதாமதமாகும் என்று கூறியதால் திரும்பி வந்தபோது மர்ம நபர் ஒருவர் சாந்தியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். எனக்குத் தெரிந்த கடை உள்ளது. அதில் கொடுத்து சரி செய்து தருகிறேன் என கூறியதின் பேரில் சாந்தி அந்த நபருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். அந்த மர்ம நபர், காலாங்கரைபட்டி பஸ்நிறுத்தம் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். பின்னர் சாந்தியை மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி மற்றும் கம்மலை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார். இதுபற்றி சாந்தி கழுகுமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பழங்கோட்டையை சேர்ந்த முருகன் மகன் திருமலைக்குமார் (36) என்பது தெரியவந்தது. இதையத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலைகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்