கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு: பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த பொது ஊரடங்கு காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பொது ஊரடங்கு காலங்களில் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் மற்றும் குறைகளை 90033 90050 என்ற சிறப்பு கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் வகையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு இயங்கி வருகிறது. கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அமைப்புகளின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.