கொரோனா நிவாரண நிதி வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்
கொரோனா நிவாரண நிதி வழங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம்.
வாணியம்பாடி,
தேர்தலின்போது தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக நேற்று வாணியம்பாடி பகுதியில் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது.
தினமும் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். நேற்று முதல் வாங்கப்பட்ட டோக்கன் தொடர்ந்து 3 நாட்கள் வழங்கப்படும். ரேஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கனில் ரேஷன் கடையின் பெயர், கடையின் எண், அட்டைதாரர் பெயர், நிவாரணம் வழங்கும் நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
டோக்கன் எண்ணை குறிப்பிடுவதற்கு தனியாக ஒரு காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. டோக்கனை பெற்றவர்கள, வருகிற 15-ந்தேதி முதல், தினமும் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ரேஷன் கடையில் வந்து தொகையை பெற்றுக்கொள்ளலாம், தெரிவித்துள்ளனர்.