வீட்டிற்குள் புகுந்த பாம்பு
சத்திரப்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
ராஜபாளையம்,
சத்திரப்பட்டியை அடுத்த எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் கலைவாணி. இவரது வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் வீரர்கள் விைரந்து சென்று வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.