மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-10 20:34 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(வயது 27), உடையார்பாளையத்தை சேர்ந்த பழனிவேல்(44), ராமச்சந்திரன்(42) ஆகியோர் டாஸ்மாக் மது பாட்டில்களை அப்பகுதியில் பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 127 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்