வாணியம்பாடியில் பிரியாணிக்கு பணம் தர மறுத்து கடையை சூறையாடிய கும்பல்
வாணியம்பாடியில் பிரியாணிக்கு பணம் தர மறுத்து கடையை சூறையாடிய கும்பல்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பிரியாணி கடை உள்ளது. இங்கு நேற்று 8 பேர் கொண்ட கும்பல் 10 பிரியாணி பார்சல் வாங்கி உள்ளனர். அதற்கு கடை உரியைமாளர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த கும்பலைசேர்ந்தவர்கள் பணம் தர மறுத்து பிரியாணி கடை உரிமையாளர்கள் பயாஸ், சுல்தான் மற்றும் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் கடையில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்துள்ளனர். இருந்த போதும் அவ்வழியாக வந்த மினிலாரியின் கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர். அதன் பேரில் பிரியாணி கடை உரிமையாளர் பயாஸ் மற்றும் மினிலாரி உரிமையாளர் சுந்தர் ஆகிய இருவரும் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஷாஜகான் (வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.