அரக்கோணம்
தக்கோலம் பேரூராட்சியில் செயல் அலுவலர் கணேசன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று தக்கோலத்தில் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையிலான பணியாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.