கொல்லிமலையில் நிலத்தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

கொல்லிமலையில் நிலத்தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

Update: 2021-05-10 18:02 GMT
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சி செல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). விவசாயி. இவரது மனைவி சிவகாமி (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாதுரையின் மனைவி நாகம்மாள் (45) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. 
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி நாகம்மாள் அப்பகுதியில் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகாமி நிலத்தகராறை காரணம் காட்டி அவரிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சிவகாமி திடீரென நாகம்மாளின் ஒரு காது பகுதியில் பயங்கரமாக அடித்தாராம்.
இதில் நாக்கம்மாளின் காது கிழிந்தது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து அவர் செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நாகம்மாள் வாழவந்தி நாடு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவகாமியை கைது செய்தனர்.
==========

மேலும் செய்திகள்