நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில் ரூ.26 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்களில் ரூ.26 கோடிக்கு மது விற்பனை டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

Update: 2021-05-10 18:02 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடந்த 2 நாட்களில் ரூ.26 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
189 டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் கொரோனாவில் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வருகிற 24-ந் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு கடந்த 8-ந் தேதி அறிவித்தது.
மேலும் 8 மற்றும் 9-ந் தேதிகளில் மாலை 6 மணி வரை இயங்கும் எனவும் அறிவித்தது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் அலைமோதினர். சிலர் மதுபாட்டில்களை சாக்கு பைகளில் வாங்கி சென்று வீடுகளில் இருப்பு வைப்பதையும் காணமுடிந்தது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் 189 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் 8 மற்றும் 9-ந் தேதிகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது.
ரூ.26 கோடிக்கு மது விற்பனை
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா ரூ.4 கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் முழு ஊரடங்கையொட்டி கடந்த சனிக்கிழமை ரூ.14 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை ரூ.12 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.26 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது இதர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை ஒப்பிடும் போது சுமார் 3 மடங்கு அதிகமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
==========

மேலும் செய்திகள்