மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை:
மயிலாடுதுைற அருேக மாணவிைய கடத்திய வாலிபா் ேபாக்ேசா சட்டத்தில் ைகது ெசய்யப்பட்டாா்.
மாணவி கடத்தல்
மணல்மேடு போலீஸ் சரகத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மயிலாடுதுறையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மயிலாடுதுறை அருகே நீடூர் கீழத்தெருவை சேர்ந்த பாலமுருகன்(வயது22) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பாலமுருகனை கைது செய்தனர்.