கொரோனா தனிப்பிரிவில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு
சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தனிப் பிரிவை தேவகோட்டை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கொரோனா தனிப் பிரிவை தேவகோட்டை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார்.
விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி களில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் இந்தபகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் விழிப்புணர்வு அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சாலை ஓரங்களில் கிருமி நாசினி தெளித்து, பொதுமக்களை முககவசம் அணிய கட்டாயப்படுத்துவது, அணிய மறுப்பவர்கள் மீது அபராதங்கள் விதிப்பது போன்றவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சிங்கம்புணரியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொேரானா தனி பிரிவு மையத்தை தேவகோட்டை ஆர்.டி.ஓ. சுரேந்திரன் தலைமையில் தாசில்தார் திருநாவுக்கரசு மற்றும் மண்டல துணை தாசில்தார் ராஜமுகம்மது, கிராம நிர்வாக அலுவலர் சபரி உள்ளிட்டோர் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
ஆலோசனை
ஆய்வின்போது தனிப்பிரிவில் நோயாளிகள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும். எந்த வகையான நோயாளிகளை அனுமதிப்பது குறித்து டாக்டர் செந்திலிடம் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் தனிப்பிரிவில் உள்ள வசதிகள் குறித்து டாக்டர் செந்திலிடம் கேட்டறிந்து மருத்துவமனை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கொேரானா தனிப்பிரிவு மையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதாக மருத்துவர்களையும் மருத்துவமனை ஊழியர்களை பாராட்டினார்.