ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் முக கவசம் அணியாத 49 பேருக்கு அபராதம்
முக கவசம் அணியாத 49 பேருக்கு அபராதம்
ஆத்தூர்:
ஆத்தூர் நகரசபை துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 18 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.3,600 அபராதம் விதித்தனர்.
இதேபோல் நரசிங்கபுரம் நகரசபை துப்புரவு அலுவலர் சரவணன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் நரசிங்கபுரம் பகுதியில் ஆய்வு செய்து முக கவசம் அணியாமல் சென்ற 31 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.6,200 அபராதம் விதித்தனர்.