தீக்குளித்த பெண் சாவு

தீக்குளித்த பெண் உயிரிழந்தார்

Update: 2021-05-09 22:14 GMT
சமயபுரம்
சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் ரெமலியா(வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டின் குளியலறைக்கு சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீசார், அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்