சென்னை சென்ற நகைக்கடை ஊழியர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை

சென்னை சென்ற நகைக்கடை ஊழியர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2021-05-09 21:24 GMT
திருச்சி
திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் பிரபல நகைக் கடை உள்ளது. இந்த நகைக்கடைக்கு புதிய நகை வாங்குவதற்காக கடை ஊழியர் மார்ட்டின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து காரில் டிரைவருடன் சென்னைக்கு சென்றார். சென்னையில் உரிய இடத்துக்கு சென்ற அவர்அங்கு சுமார் 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட நகைகளை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி திரும்பி இருக்க வேண்டும். ஆனால் திருச்சிக்கு அவரும், டிரைவரும் வரவில்லை. நேற்று காலை வரை அவர்கள் வராததால் ஜூவல்லரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர்களுடைய செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து கடை நிர்வாகத்தினர் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதில், நகைகளை வாங்கி வர சென்னை சென்ற ஊழியர் மார்ட்டின் ரூ.75 லட்சம் மதிப்பு நகைகளுடன் திரும்பி வரவில்லை.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் கடைசியாக பயன்படுத்திய செல்போன் எண் எந்த இடத்தை காட்டுகிறது? எப்போது தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதோடு சென்னை சென்ற தனிப்படை போலீசார் மார்டினை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்