கோவையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலி

கோவையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள்.

Update: 2021-05-09 21:08 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் இந்த மாதம் ஆரம்பம் முதலே கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் இன்று முதல் வரும் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

மாவட்டத்தில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று கோவை மாவட்டத்தில் புதிய உச்சமாக 2 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 99 ஆக உயர்ந்தது. கோவையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இதில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 56 வயது ஆண், 46 வயது ஆண், 47 வயது ஆண், 60, 62, 64, 60, 67 வயது முதியவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 64 வயது முதியவர் என மொத்தம் 9 பேர் பலியானார்கள். 

இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 759-ஆக உயர்ந்தது. இதுதவிர, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,705 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மாவட்டமத்தில் 82 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்