கொரோனாவுக்கு முதியவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,316 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. 5,752 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 510 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.