தென்காசி பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்

தென்காசி பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2021-05-09 20:13 GMT
தென்காசி, மே:
தென்காசி அருகே உள்ள இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் தென்காசி புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் மற்றும் போக்குவரத்து துறையை சேர்ந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் போலீசார் ஆகியோருக்கும் பொதுமக்களுக்கும் ெகாரோனா பரிசோதனை முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மாரீஸ்வரி வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. இதில் டாக்டர் பிவினா அனைவருக்கும் கொரோனா நோயின் அறிகுறிகள், தனிமனித இடைவெளி, கைகழுவுதல், முகக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினார்.
மேலும் இலத்தூர் சித்தா பிரிவின் சார்பில் மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா ஆலோசனைப்படி மருந்தாளுனர் நூர்ஜஹான் பேகம் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீர் பொடி மற்றும் சித்த மருந்துகளை வழங்கி இந்த நோய்க்கான அறிகுறிகள், சித்த மருத்துவ சிகிச்சை முறை, கிராம்பு, மஞ்சள், உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளித்தல். நொச்சி, தும்பை, துளசி, யூகலிப்டஸ், மஞ்சள் போன்ற மூலிகை கொண்டு ஆவி பிடித்தல், மூலிகை தேநீர், சக்தியை கூட்டும் பழச்சாறுகள், சுக்கு, மிளகு, பால் போன்ற பயனுள்ள தகவல்கள் குறித்து பேசினார். முகாமில் மருந்தாளுனர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சிலம்பரசன், அபிசேக், ரமேஷ், லேப் டெக்னீசியன்கள் சகிலா, கணேசன், முரளி ஆகியோர் பங்கேற்றனர். தென்காசி போக்குவரத்து கழக இளநிலை பொறியாளர் காசீம் நபீக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்