திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல நேற்று இந்த மாதத்துக்கான பிரதோஷம் நடைபெற்றது. இதனையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை விட்டு முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதில் பால் பழம், பன்னீர், விபூதி, சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. சுற்று வட்டார பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.