பள்ளிகொண்டா அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 தொழிலாளர்கள் பலி

பள்ளிகொண்டா அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Update: 2021-05-09 18:04 GMT
அணைக்கட்டு

மரம் ஏறும் தொழிலாளர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேலாலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வில்சன். இவரது மகன் டேவிட் (வயது 32). இவரது நண்பர் ஆலம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த ராஜா சின்னசாமி மகன் சிலம்பரசன் (31). தென்னை மரம் ஏறும் தொழிலாளிகள்.

இந்தநிலையில் நேற்று காலை இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆம்பூருக்கு சென்றனர். பின் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பகல் 12.30 மணிக்கு பள்ளி கொண்டாவை அடுத்த பாலாண்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தனர்.


கார்மோதி பலி

அப்போது ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கை கால்கள் முறிந்த நிலையில் பலியானார்கள். 

விபத்துக்குள்ளான காரை ஆம்பூரை சேர்ந்த முகம்மது அப்பான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். விபத்து நடந்ததும் காரை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்த அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். 

கார் பறிமுதல்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்