மதுபான ஆலை வேன் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

மதுபான ஆலை வேன் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-09 17:49 GMT
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே கல்லாகோட்டையில் தனியார் மதுபான ஆலை உள்ளது. இந்த ஆலையில், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி முல்லைக் குடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சங்கர் (வயது 30) வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்த ஊழியர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தர்வகோட்டை கோமாபுரத்தை சேர்ந்த சரத்குமார் (27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேனுக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து வேன் டிரைவர், மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றார். அப்போது சரத்குமார், வேனை மறித்து சங்கரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வேனின் கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து சங்கர் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்