இன்று முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம்

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-05-09 17:42 GMT
புதுக்கோட்டை:
டாஸ்மாக் கடைகள்
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை முதல் பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 
டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு தேவையான மது பானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் மதுபானங்கள் விற்பனை இருமடங்காக உயர்ந்திருந்தது. இதேபோல மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
கடைவீதிகள்
முழு ஊரடங்கில் கடைகள் அடைக்கப்படுவதால் புதுக்கோட்டை கடைவீதிகளில் ஜவுளி, நகைக்கடைகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். சலூன் கடைகள் நேற்று திறந்திருந்த நிலையில் முடி திருத்துவதற்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

மேலும் செய்திகள்