சங்கராபுரத்தில் சாராயம் காய்ச்ச முயன்ற 4 பேர் கைது
சங்கராபுரத்தில் சாராயம் காய்ச்ச முயன்ற 4 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி தலைமையிலான போலீசார் சங்கராபுரம் தனியார் பெட்ரோல் பங்க் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 200 கிலோ வெல்லம், 15 கிலோ கடுக்காய் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் ஆட்டோவில் வந்தவர்கள் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த பர்னபாஸ்(வயது 45), வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார்(40), புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(22), சங்கராபுரத்தை சேர்ந்த பழனி(50) என்பதும் மேற்கண்ட பொருட்களை சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து வெல்லம், கடுக்காய் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.