ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள குப்பல்நத்தத்தை சேர்ந்தவர் கணேசன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சித்ரா (வயது 34). கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கணேசனுக்கும், சித்ராவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா கோபித்துக்கொண்டு ஆண்டிப்பட்டி அருகே அழகாபுரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த சித்ரா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.