பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
வால்பாறை
வால்பாறையில் நேற்று சந்தை நாளாக இருந்ததாலும் அனைத்து எஸ்டேட் பகுதிக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் இன்று முதல் முழு ஊரடங்கு என்பதாலும் தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க வால்பாறை நகரில் உள்ள நகராட்சி மார்க்கெட் பகுதி நகரில் பொதுமக்கள் குவிந்தனர்.
அங்கு உள்ள நடைபாதை கடைகள், வங்கி ஏ.டி.எம். மையங்கள், டாஸ்மாக் கடைகளில் கொரோனா தொற்று பயமில்லாமல் குவிந்த கூட்டத்தால் வால்பாறை நகரம் திணறியது.
இதனால் அரசு அதிகாரிகளும், போலீசாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் தவித்தனர்.
இருப்பினும் போலீசார் மக்கள் நெருக்கமாக இருந்த காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புகளையும் அரசின் ஊரடங்கு விதிமுறைகளையும் எஸ்டேட் பகுதி மக்களுக்கு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தனர்.