கலவை அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 247 மதுபாட்டில்கள் பறிமுதல்

கலவை அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 247 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2021-05-09 14:17 GMT
கலவை,

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் காய்கறி கடை உள்ளிட்ட அத்தியாவசி பொருட்கள் விற்பனை கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம் என்றும், மதுபான கடைகள் முழுமையாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் போட்டுப்போட்டு மதுபான பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

இந்த நிலையில் நேற்று சென்னசமுத்திரம் சாலையில் கலவை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 247 மது பாட்டில்கள் அருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்தவர் ராந்தம் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது 41), படவேட்டான் (43) ஒன்பதும் அதிக விலைக்கு விற்பனை செய்ய மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச்சென்றதும் தெரியவந்தது. 

இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். ஆட்டோ மற்றும் மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்