வேலூர் மாவட்டத்தில் 583 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் 583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-05-09 14:15 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 674 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 583 பேருக்கு தொற்று உறுதியானது. 

அதில், 300-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 583 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 30 ஆயிரத்து 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 27 ஆயிரத்து 491 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். 422 பேர் உயிரிழந்துள்ளனர். 2,997 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்