ஆத்தூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
ஆத்தூர் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முக்காணி ரவுண்டானா பிள்ளையார் நகர் பகுதியில் மது விற்றதாக, அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் மோகனை (வயது 33) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தெற்கு ஆத்தூர் கொழுவைநல்லூர் ரோட்டின் அருகே மது விற்ற சீனிவாசனை (59) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.