கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 82 ஆயிரம் பேர் குணமடைந்ததால் ஆறுதல்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது. ஆறுதலாக ஒரே நாளில் 82 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்.

Update: 2021-05-09 11:04 GMT
மும்பை,

மராட்டியத்தில் நேற்று புதிதாக 53 ஆயிரத்து 605 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை மாநிலத்தில் 50 லட்சத்த 53 ஆயிரத்து 336 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய உற்சாகம் அளிக்கும் வகையில் நேற்று மாநிலத்தில் 82 ஆயிரத்து 266 பேர் குணமடைந்தனர். இதனால் இதுவரை குணமானவர்கள் எண்ணிக்கை 43 லட்சத்து 47 ஆயிரத்து 592 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 28 ஆயிரத்து 213 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 37 லட்சத்து 50 ஆயிரத்து 502 பேர் வீடுகளிலும், 28 ஆயிரத்து 453 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் வைரஸ் ேநாய்க்கு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகளவிலேயே உள்ளது. நேற்று தொற்றுக்கு மேலும் 864 பேர் பலியானார்கள். இதுவரை 75 ஆயிரத்து 277 பேர் உயிரிழந்து உள்ளனர். பலி எண்ணிக்கை முக்கால் லட்சத்தை தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்