சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்

சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-09 04:27 GMT

இலவச அரிசி

கொரோனா 2-வது தீவிரமடைந்துள்ள நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி புதுவையில் 5 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அரிசி வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.எஸ்.பி.ரமே‌‌ஷ் எம்.எல்.ஏ., குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1.75 லட்சம் குடும்பங்கள்

இந்த திட்டத்தின்படி புதுவையை சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் (சிவப்பு அட்டைதாரர்) உள்ள குடும்பங்களுக்கும், அந்தியோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 2 மாதங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் குடும்பத்தினர் பயனடைவார்கள். விரைவில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்