பள்ளி மாணவி கடத்தல்; டிரைவர் போக்சோவில் கைது

பொன்னேரி அருகே, பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-08 23:12 GMT
பொன்னேரி, 

பொன்னேரி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பொன்னேரி அருகே உள்ள உப்பரப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் அறுவடை எந்திர டிரைவர் சோபன்பாபு (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர்.

அதன் பின்னர், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்