கோவை மாவட்டத்தில் புதிதாக 2117 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 2,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-05-08 22:56 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் புதிதாக 2,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியானார்கள்.

2,117 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்படி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92 ஆயிரத்து 579 ஆக உயர்ந்தது. 

மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1,656 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இதன் மூலம் இதுவரை 80 ஆயிரத்து 904 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 10,925 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர கோவையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதன்காரணமாக மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 750 ஆக அதிகரித்தது.

ஜூன் மாதத்தில் உச்சத்தில் இருக்கும்

கோவை மாவட்டத்தில் இன்னும் 5 நாட்களில் கொரோனா மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்றும், ஜூன் மாதத்தில் மேலும் உச்சத்தில் இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் அதி தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 

மக்கள் சரியாக ஒத்துழைக்காததால் தான் அதிகளவு கொரோனா தொற்று பரவல் உள்ளது. இந்தநிலை நீடித்தால் இன்னும் 5 நாட்களில் கொரோனா மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும். 

அத்துடன் அடுத்த மாதம் (ஜூன்) கொரோனாவின் தாக்கம் மேலும் உச்சத்தில் இருக்கும். எனவே பொதுமக்கள் அரசு கூறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்