கோவை அருகே தொழிலாளி தற்கொலை

கோவை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-05-08 22:56 GMT
சரவணம்பட்டி

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வையம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது38). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. இந்த நிலையில் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். 

அதற்கு சிகிச்சை பெறுவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடிய வில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்