கோவையில் மது விற்ற 30 பேர் கைது
கோவையில் மது விற்ற 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளுக்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்ககப்பட்டு இருந்தது.
நாளை (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. இதைப்பயன்படுத்தி சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதைதடுக்க போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகர பகுதியில் பேரூர் ரோடு, பாலக்காடு ரோடு மற்றும் புறநகர் பகுதிகளான, பேரூர், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், மேட்டுப்பாளையம் ஆகிய உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 640 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.