எடப்பாடியில் மின்னல் தாக்கி ஆட்டோ டிரைவர் சாவு

எடப்பாடியில் மின்னல் தாக்கி ஆட்டோ டிரைவர் சாவு.

Update: 2021-05-08 22:43 GMT
எடப்பாடி,

எடப்பாடியை அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் மோகன்பாபு (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு போடிநாயக்கன்பட்டி செல்லும் வழியில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் லேசாக மழை பெய்தது. அந்த சமயத்தில் மோகன்பாபுவுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் அங்குள்ள மரத்தின் அடியில் நின்று கொண்டு செல்போனில் பேசினார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மோகன்பாபு மயங்கி விழுந்தார். அவரை நண்பர்கள் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்களின்உட் ரோவில்சன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்