அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. ஆய்வு
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரகுராமன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
சாத்தூர்,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ரகுராமன் எம்.எல்.ஏ. சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்தும், பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார். அப்போது தலைமை மருத்துவர் கேசவன், டாக்டர்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, ம.தி.மு.க நகர செயலாளர் கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.