மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 குழந்தைகளின் தாய் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 குழந்தைகளின் தாய் உயிரிழந்தார்;

Update: 2021-05-08 20:55 GMT
தோகைமலை
கரூர் மாவட்டம் தோகைமலை, கொசூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி யோகாம்பாள் (வயது 25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் பிறந்த 2-வது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக நேற்று முன்தினம் பஞ்சபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். போதுராவுத்தன்பட்டி-கொசூர் மெயின் சாலையில் வந்தபோது யோகாம்பாள் திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகாம்பாள் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்