மணலி விரைவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பட்டினத்தார் கோவில் தெரு, மாணிக்கம் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
திருவொற்றியூர்,
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பட்டினத்தார் கோவில் தெரு, மாணிக்கம் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
அதேபோன்று மணலி விரைவு சாலையோரம் முல்லை நகர், கார்கில் நகர் என பக்கிங்காம் கால்வாய் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக மணலி விரைவு சாலையோரம் வடிகால்வாய் அமைக்கும் இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்களை திருவொற்றியூர் மண்டல செயற்பொறயாளர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் அமல்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர்.