கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக கரூர் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக கரூர் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.;

Update:2021-05-08 00:28 IST
கரூர்
கரூர் மாரியம்மன் கோவில்
கரூர் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மே மாதம் வெகுவிமரிசையாக சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இதனால் இந்த ஆண்டாவது சித்திரை திருவிழா நடைபெறும் என பக்தர்கள் காத்திருந்தனர். 
திருவிழா ரத்து
இதையடுத்து கரூர் மாரியம்மன் கோவில் முன்பு   கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் சார்பில் கோவில் முன்பு ஒரு அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
கரூர் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 9-ந்தேதி தொடங்கி நடைபெற இருந்தது. 
தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி திருவிழா ரத்து செய்யப்படுகிறது
பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து மேற்கண்ட விழாக்காலத்தில் வீட்டிலேயே அம்மன் படத்திற்கு ஒரு குடத்தில் மஞ்சள் நீர் வைத்தும், வேப்பில்லை சொருகி இளநீர், தேங்காய், பழங்கள் படைத்து தயிர் சாத படையிலுடன் வழிபாடு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
ஏமாற்றம்
கரூர் மாரியம்மன் கோவில் சி்த்திரை திருவிழா இந்தாண்டாவது நடைபெறும் என காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்