2 பேர் கைது

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது;

Update:2021-05-02 00:57 IST
பல்லடம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுபானங்களை, அதிக விலையில் விற்பனை செய்வதற்காக பதுக்கிவைப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் லட்சுமி மில் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட்டில் சோதனை மேற்கொண்டபோது அங்கு 50 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்கள் பதுக்கிய அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் சுரேஷ் வயது33 என்பவரை போலீசார் கைது செய்து, 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் அவினாசியை அடுத்த பெரிய கருணை பாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி சண்முகசுந்தரம்28 பதுக்கி வைத்திருந்த  48 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்