விபத்தில் பலியான டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.18 லட்சம் நஷ்டஈடு

விபத்தில் பலியான டிராக்டர் டிரைவர் குடும்பத்துக்கு ரூ.18 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தேவகோட்டை கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2021-04-30 17:41 GMT
தேவகோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 48).டிராக்டர் டிரைவர். இவர் அந்த ஊரில் உள்ள பந்தல் காண்டிராக்டர் திருநாவுக்கரசு என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். திருவொற்றியூரில் இருந்து தேவகோட்டைக்கு பந்தல் சாமான்களை கடந்த 17.4.2018 அன்று டிராக்டரில் ஏற்றி திருச்சி-ராமேசுவரம் சாலையில் இரவு 8 மணிக்கு சென்று கொண்டிருந்தார். கருமொழி கோழிப்பண்ணை அருகே டிராக்டரை நிறுத்தி அந்த வாகனத்தில் உள்ள பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். இதற்கு நஷ்ட ஈடு கேட்டு அவரது குடும்பத்தினர் வக்கீல் செலுகை கார்த்திகேயன் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், பலியான தர்மராஜ் குடும்பத்திற்கு ரூ.18 லட்சத்து 25 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன்  மதுரை நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்