பல்லடத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 2 கடைகளுக்கு சீல்
பல்லடத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 2 கடைகளுக்கு சீல்
பல்லடம்
பல்லடத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேற்பட்ட கடைகள், செயல்படக்கூடாது என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், தலைமையில், நகராட்சி பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை, பின்பற்றாததால், அந்தக்கடை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அதே பகுதியில் உள்ள பேக்கரியில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை,பின்பற்றாததால், நகராட்சி நிர்வாகத்தினர் பேக்கரியை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.இதேபோல பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உள்ள ஒரு பேக்கரியில், விதிமுறைகளை, பின்பற்றாததால் அந்த பேக்கரிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.