உடுமலையில் கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
உடுமலையில் கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
உடுமலை
உடுமலையில் கயிறு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
கயிறு தொழிற்சாலை
உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் உடுமலை ஏரிப்பாளையத்தில் அபிராமி காயர்ஸ் என்ற பெயரில் கயிறு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் தென்னை நார் மூலம் கயிறு தயாரிக்கப்பட்டு, அவை பண்டல் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக இந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்பில், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்தபடி வேலை செய்து வருகிறார்கள்.
தீ விபத்து
இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த கயிறு தொழிற்சாலையில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அருகில் தூங்கி கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது, கயிறு தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டதும், வடமாநில தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து உடனடியாக வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து கயிறு தொழிற்சாலையில் தீப்பிடித்தது குறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பண்டல், பண்டல்களாக வைக்கப்பட்டிருந்த கயிறு எரிந்து சாம்பலானது.
மேலும் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.