பெருமாநல்லூர் அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

பெருமாநல்லூர் அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

Update: 2021-04-30 16:52 GMT
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகேயுள்ள வாரணசிபாளையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாட்டுமாட்டுப் பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் காங்கேயம் இனமான செவலை மாடு ஒன்று காளைக்கன்று (ஆண்) ஒன்றும், கிடாரி கன்று (பெண்) ஒன்றும் என இரட்டைக்கன்றுகளை ஈன்றது. இந்த கன்றுகளை தோட்டத்தின் பராமரிப்பாளர் பாலன் பராமரித்து வருகிறார். இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தி கூறுகையில் காங்கேயம் இன மாடுகள் தற்போது அரிதாகி வருகிறது. அவ்வகையில் எங்களது மாடு 2 கன்றுகளை ஒரே பிரசவத்தில் ஈன்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். இரு கன்றுகளையம் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் இதுகுறித்த தகவல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

---

மேலும் செய்திகள்